COVID-19
தடுப்பூசித் தகவல்

#IGOTVACCINATED

LAST UPDATED: SEPTEMBER 5, 2021

என்ன

CHE

COVID-19 என்றால் என்ன?

COVID-19 என்பது முதன்முதலில் 2019 இல் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயைக் குறிக்கிறது. COVID-19, SARS-CoV-2 வைரஸால் ஏற்படுகிறது.

COVID-19 வகைகள் என்னென்ன?

நீங்கள் ஒரு வைரஸிற்கு வெளிப்படுத்தப்பட்டால், அது உங்கள் உடலில் நுழைந்து தானாகவே பல மடங்குகளாகப் பெருகி, மேலும் மேலும் நகல்களை உருவாக்கும். ஒரு வைரஸ் பல மடங்குகளாகப் பெருகும்போது தவறிழைக்கையில் ஒரு உருமாற்றம் ஏற்படுகிறது. போதுமான உருமாற்றங்கள் ஏற்பட்டு, திரும்பத்திரும்ப நிகழ்ந்தால், அது ஒரு மாறுபாட்ட வகையாக ஆகிறது. 'கவலைக்குரிய மாறுபாட்ட வகை' என்பது வைரஸின் ஒரு பதிப்பாகும், இது பொதுவாக அதிகப்படியாக தொற்றை ஏற்படுத்தக்கூடியது மற்றும் ஆபத்தானது. ஜூலை 2021 நிலவரப்படி, கவலைக்குரிய நான்கு COVID-19 மாறுபாட்ட வகைகள் உள்ளன. ஓன்டாரியோவில் மிகவும் கவலைக்குரிய நிலையை ஏற்படுத்துவது டெல்டா வகை ஆகும்.

COVID-19 தடுப்பூசி என்றால் என்ன?

COVID-19 தடுப்பூசி என்பது உங்கள் உடலுக்கு வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்ளக் கற்றுக்கொடுக்கப் பயன்படும் ஓர் ஊசியாகும். ஹெல்த் கனடா ஒப்புதலளித்த தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் திறன்மிக்கவை. தடுப்பூசிகள், நோயெதிர்ப்புச் சக்தியை அடைய mRNA அல்லது பல மடங்குகளாக பெருகாத வைரஸ் வெக்டர் ஆகியவற்றைச் சார்ந்துள்ளன. இந்தத் தடுப்பூசிகள் மூலம் உங்களுக்கு உயிர் வைரஸ் செலுத்தப்படாது. COVID-19 தடுப்பூசிகளினால் உங்களுக்கு COVID-19 தொற்று ஏற்படாது.

என்னென்ன COVID-19 தடுப்பூசிகள் கிடைக்கின்றன?

கனடாவில் பயன்படுத்த இரண்டு mRNA தடுப்பூசிகள் மற்றும் இரண்டு பல மடங்குகளாக பெருகாத வைரஸ் வெக்டர் (NRVV) தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:

  • ஃபைசர்: 2 டோஸ்கள் (mRNA)
  • மாடர்னா: 2 டோஸ்கள் (mRNA)
  • அஸ்ட்ராஜெனெகா: 2 டோஸ்கள் (NRVV)
  • ஜான்சன் & ஜான்சன்: 1 டோஸ் (NRVV)

எனக்கு ஏற்ற சிறந்த COVID-19 தடுப்பூசி எது?

ஹெல்த் கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் அனைத்தும் பாதுகாப்பானவை மற்றும் திறன்மிக்கவை. உங்களுக்கு ஏற்ற சிறந்த தடுப்பூசி உங்களுக்கு கிடைக்கக் கூடிய முதல் தடுப்பூசி வகையே! தடுப்பூசிகளைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், உங்கள் சுகாதார பராமரிப்பு வழங்குநரிடம் பேசுங்கள்.
பொது சுகாதார வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்ற தடுப்பூசி பிராண்டுகளைக் கலந்து உபயோகிப்பது பாதுகாப்பானதே. உங்கள் முதல் டோஸாக mRNA தடுப்பூசி (ஃபைசர் அல்லது மாடர்னா) போட்டுக்கொண்டால், mRNA தடுப்பூசிகளில் எதையேனும் ஒன்றை உங்கள் இரண்டாவது டோஸாகப் பெறலாம். உங்கள் முதல் டோஸாக நீங்கள் அஸ்ட்ராஜெனெகாவைப் பெற்றிருந்தால், mRNA தடுப்பூசியை உங்கள் இரண்டாவது டோஸாகவோ, அஸ்ட்ராஜெனெகாவின் மற்றொரு டோஸையோ நீங்கள் போட்டுக்கொள்ளலாம்.

COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளச் செல்லும்போது நான் எவற்றை எதிர்கொள்வேன்?

தடுப்பூசி மையங்களுக்கு ஏற்ப அனுபவங்கள் வேறுபடலாம். நீங்கள் முன்பதிவு செய்துவிட்டு செல்லும்போது எதிர்பார்க்கக்கூடியவை:

  • அங்கு சென்றடைந்தவுடன் ஒரு தன்னார்வலரிடம் பதிவு செய்ய வேண்டும்
  • COVID-19 சம்பந்தப்பட்ட சோதனைக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் மற்றும் உங்கள் சுகாதார அட்டையை வழங்க வேண்டும் *
  • தடுப்பூசி போட்டுக்கொள்ள, தகுதிபெற்ற சுகாதார பராமரிப்பு ஊழியரிடம் அமர வேண்டும்
  • நீங்கள் நலமாய் உணர்வதை உறுதிசெய்துகொள்ள, தடுப்பூசி போட்ட பிறகு 15 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்
  • உங்களுக்கான டோஸைப் பெற்றுவிட்டீர்கள் என்பதையும், நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய பக்க விளைவுகளையும் குறிப்பிடுகின்ற ஒரு தாளுடன் வீட்டிற்குச் செல்வீர்கள்.

உங்களுக்கு ஊசிகள் குறித்த பயம் இருந்தால், மொழிபெயர்ப்புச் சேவைகள் தேவைப்பட்டால் அல்லது வேறு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், அந்த ஏற்பாடுகளைச் செய்ய வசதியாக முன்கூட்டியே அழைத்து தெரிவிக்கவும். உங்களுக்கு இதற்குமுன் ஊசி போடும்போது மயக்கம், தலைச்சுற்றல் அல்லது ஒவ்வாமை எதிர்விளைவுகள் ஏற்பட்டுள்ளது எனில், நீங்கள் டிரைவ்-த்ரோ தடுப்பூசி போடுதலுக்குத் தகுதிபெற மாட்டீர்கள். நீங்கள் கிளினிக், மருத்துவமனை, மருந்தகம் அல்லது பாப்-அப்பிற்கு நேரில் செல்ல வேண்டும்.

*உங்களிடம் சுகாதார அட்டை இல்லையென்றால், உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கிளினிக்குகள் உள்ளன. பொதுவாக, இந்த கிளினிக்குகளுக்கு உங்கள் ஏதேனும் ஒரு ஐடி தேவைப்படுகிறது. ஓன்டாரியோவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள நீங்கள் ஒரு சுகாதார அட்டை வைத்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்கள் தேவைகளுக்கு ஏற்ற தடுப்பூசிக் கிளினிக்கைக் கண்டுபிடிப்பதில் உங்களுக்கு ஆதரவு தேவைப்பட்டால், outreach@missinformed.ca என்ற முகவரிக்கு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

COVID-19 தடுப்பூசியினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன?

தடுப்பூசியால் ஏற்படுகின்ற பொதுவான பக்க விளைவுகளில் உள்ளடங்குபவை:

  • உடல் வலி
  • ஊசி செலுத்திய இடத்தைச் சுற்றி சிவத்தல் மற்றும் வீக்கம்
  • களைப்பு
  • தலைவலி
  • தசை வலி
  • குளிர்நடுக்கம்
  • காய்ச்சல் மற்றும் குமட்டல்
உங்கள் இரண்டாவது டோஸுக்குப் பிறகு ஏற்படும் பக்க விளைவுகள் உங்கள் முதல் டோஸைக் காட்டிலும் கடுமையானதாக இருக்கலாம். இந்தப் பக்க விளைவுகள் பொதுவானவை மற்றும் தற்காலிகமானவை. பக்க விளைவுகள் நிகழாமல் இருப்பதும் இயல்பானதே.
மிகவும் அரிது என்றாலும், இரத்த உறைவு, இதய அழற்சி, தந்துகிக் கசிவு நோய்க்குறி, குய்லியன் பாரே நோய்க்குறி அல்லது ஒவ்வாமை எதிர்வினைகள் உள்ளிட்ட கடுமையான பக்க விளைவுகள் ஏற்படக்கூடும். ஜூலை 5ஆம் தேதி வரை, தடுப்பூசி போடப்பட்டவர்களில் 99.9% நபர்களுக்கு இந்தக் கடுமையான பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. தடுப்பூசிகளால் ஏற்படும் பக்க விளைவுகள் எப்போதும் கண்காணிக்கப்படுகின்றன. உங்களுக்கு ஏதேனும் கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டால், 911 ஐ அழைத்திடுங்கள் அல்லது உங்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.

Perché

COVID-19 க்கு எதிராக நான் ஏன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்?

நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால், உங்களுக்கு COVID-19 தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறிப்பிடத்தக்களவு குறைகிறது. நீங்கள் நோய்த்தொற்றுக்கு ஆளானால், கடுமையான பக்க விளைவுகளை அனுபவிப்பது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, வைரஸால் இறப்பது போன்றவற்றிற்கான வாய்ப்பு அரிதாகிறது. உங்களுக்கு COVID-19 தொற்று ஏற்பட்டிருந்தது என்றாலும், தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது, ஏனெனில் இது பாதுகாப்பை வலுப்படுத்துகிறது. தற்போதுள்ள தடுப்பூசிகளை எதிர்க்கத்தக்க வகையில் வைரஸ் பல மடங்குகளாகப் பெருகுவதையும் மாறுபாட்ட வகைகளாக உருமாறுவதையும் தடுக்க, தடுப்பூசி போட்டுக்கொள்வது முக்கியம்.
தொற்றுக்கு ஆளானவர்களிடத்தில் மட்டுமே வைரஸால் உருமாற முடியும். மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டால், வைரஸ் உருமாறுவதற்கும் பல மாறுபாடுகளை உருவாக்குவதற்கும் வாய்ப்பே இருக்காது. COVID-19 வைரஸுக்கு எதிரான எங்கள் சிறந்த பாதுகாப்பு தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான்.

நான் ஏன் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும்?

உங்கள் முதல் டோஸாக ஃபைசர், மாடர்னா அல்லது அஸ்ட்ராஜெனெகாவைப் பெற்றிருந்தால், தடுப்பூசி போட்டுக்கொள்வது முழுமையடைய உங்களுக்கு இரண்டாவது டோஸ் தேவை. முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்வது COVID-19 க்கு எதிரான மிகப்பெரிய பாதுகாப்பை உங்களுக்கு வழங்குகிறது. உங்கள் முதல் டோஸுக்கு 2 வாரங்களுக்குப் பிறகு நீங்கள் ஓரளவு பாதுகாக்கப்படுவீர்கள், ஆனால் உங்கள் இரண்டாவது டோஸ் தற்போதுள்ள அனைத்து மாறுபாடுகளிலிருந்தும் மிகவும் திறன்மிக்க, நீண்ட காலப் பாதுகாப்பை வழங்கும்.

மந்தை நோயெதிர்ப்புச் சக்தி ஏன் முக்கியம்?

பெரும்பாலான மக்கள் ஒரு குறிப்பிட்ட நோய்க்கு நோயெதிர்ப்புச் சக்தி கொண்டவர்களாக இருந்து, அந்த நோய் பரவுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்போது மந்தை நோயெதிர்ப்புச் சக்தி என்பது நிகழ்கிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகள் போன்று தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாதவர்கள் வைரஸால் பாதிக்கப்படுவதிலிருந்து தடுக்க மந்தை நோயெதிர்ப்புச் சக்தி உதவுகிறது. மந்தை நோயெதிர்ப்புச் சக்தியை அடைவதற்கு தடுப்பூசி போட்டுக்கொள்வது முக்கியமாகும். தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, போலியோ, சிக்கன் பாக்ஸ் ஆகியவை மிகவும் பொதுவான தொற்று நோய்களாக இருந்தன. தடுப்பூசிகளின் உதவியுடன், இந்தத் தொற்று நோய்கள் ஒவ்வொன்றிற்கும் மந்தை நோயெதிர்ப்புச் சக்தியை எட்டியுள்ளோம். இப்போது, ​​அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி போட்ட நாடுகளில் இந்த நோய்கள் மிகவும் அரிதானவையாக உள்ளன. COVID-19 க்கு எதிராக மந்தை நோயெதிர்ப்புச் சக்தியை அடைய, தகுதியுள்ள அனைவருமே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நாம் எந்தளவு முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்கிறோமோ, அந்தளவு ​​விரைவாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம்.

எப்படி

எங்கே

ஓன்டாரியோ முழுவதும் தடுப்பூசி போட பல இடங்கள் உள்ளன. மருந்தகங்கள், மருத்துவரின் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பாப்-அப் கிளினிக்குகள் ஆகியவை இதில் அடங்கும். உங்கள் தேவைகளுக்கு ஏற்ற தடுப்பூசிக் கிளினிக்கைக் கண்டுபிடிப்பதில் உங்களுக்கு ஆதரவு தேவைப்பட்டால், outreach@missinformed.ca என்ற முகவரிக்கு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

உங்கள் அருகிலுள்ள தடுப்பூசிக் கிளினிக்கைக் கண்டுபிடித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.

கீழே உள்ள இணைப்பு வழியாக நீங்கள் முன்பதிவு செய்திடுங்கள்

பொது
கேள்விகள்

Is it safe to mix vaccines?

It is safe to mix the COVID-19 vaccines. Mixing vaccines is not a new idea. It has been done in the past with Ebola, flu shots, and hepatitis vaccines. 

Mixing Astrazeneca with mRNA

New evidence suggests mixing AstraZeneca with an mRNA vaccine (Pfizer, Moderna) is highly effective and safe. There is also no known risk of blood clots with the Pfizer or Moderna vaccines. If you got Astrazeneca as your first dose, it is recommended you get either Pfizer or Moderna as your second dose. However, you can also get a second dose of Astrazeneca if you had no severe issues with your first dose. Once you have two doses, you are fully vaccinated and have the greatest protection against COVID-19.

Mixing mRNA with mRNA

The mRNA vaccines (Pfizer, Moderna) can also be mixed because they are so similar. Vaccines from different companies can be mixed when they:

  1. Have the same purpose

  2. Are used in the same populations

  3. Work in the same way

  4. Are equally safe

  5. Are equally effective

Looking at all these characteristics, the Pfizer and Moderna vaccines are pretty much the same. This means that if you got Pfizer as your first shot, you can get Moderna as your second. If you got Moderna first, you can get Pfizer second.

The most important thing is to get the first vaccine available to you!